Top News
| அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம் | | சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட்டில் நாட்டுக்குப் பெருமை சேர்த்த அக்கரைப்பற்று அல்-முனவ்வரா மாணவி அனாபா | | பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் |
Oct 16, 2026

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

Posted on October 16, 2026 by Admin | 55 Views

கிரிஷ் (Krrish) நிறுவன விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியலை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவின் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை நீதவான் நிராகரித்தார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை தொடர்பான கட்டளை இன்னும் முழுமையாகத் தயாரிக்கப்படாத காரணத்தினால், அது குறித்த தீர்மானம் அடுத்த வழக்குத் தவணையின் போது அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

கிரிஷ் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வகையில் சுமார் 70 மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே இவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.