Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 21, 2026

திருக்கோவில், அக்கரைப்பற்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய கலைத்திட்ட செயலமர்வு

Posted on October 24, 2026 by Admin | 111 Views

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அனுசரணையுடன் 2027ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய கலைத்திட்ட மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வு அண்மையில் காஞ்சிரங்குடா கால்நடை வளர்ப்புப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்செயற்றிட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 4,184 முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமாகவே திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்றுக் கல்வி வலயங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்ட முன்பள்ளிப் பணியகத்தின் செயலாற்றுகைப் பணிப்பாளர் எம்.சீ. நிஷாந்த குமார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.உதயகுமார் மற்றும் கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் தவிசாளர் எம்.ஏ.அமீர்டீன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு செயலமர்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இச்செயலமர்வில் வளவாளரும் ஒருங்கிணைப்பாளருமான திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.விவேகானந்தராஜா, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை கெளரவ உறுப்பினருமான ஏ.எல்.பாயிஸ், வெளிக்கள உத்தியோகத்தர் மோகன்தாஸ், அம்பாறை மாவட்டப் பணியகத்தின் திட்ட இணைப்பாளர் எஸ்.எம்.றிசான், ‘டெப்லிங்க்’ (Deaflink) நிறுவனப் பிரதிநிதி இ.றொசான், கிழக்கு மாகாண இணைப்பாளர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.