Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

அட்டாளைச்சேனை ‘ஹவுஸ் ஒப் இங்கிலீஷ்’ நிறுவனத்தில் விசேட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Posted on October 28, 2026 by Admin | 98 Views

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை ‘ஹவுஸ் ஒப் இங்கிலீஷ்’ கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் விசேட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வொன்று நிறுவனத்தின் நிருவாகத்தினர் தலைமையில் இன்று (28.10.2026) நிறுவன வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எச். பஹ்மி வளவாளராகக் கலந்துகொண்டு விசேட விழிப்புணர்வுக் கருத்துரைகளை வழங்கினார்.

இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வழிமுறைகள், வீட்டுச் சூழலையும் கல்வி நிலையங்களையும் தூய்மையாகப் பேணுவதன் அவசியம், மற்றும் டெங்கு காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளை இனங்கண்டு உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுவது எவ்வாறு என்பது குறித்து பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் பெற்றோர்களுக்கு விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பெற்றோர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இவ்விழிப்புணர்வு நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஒத்துழைப்புடனும் கலந்துகொண்டதுடன் தமது சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபெற்றனர்.