Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு நவம்பர் 16க்கு ஒத்திவைப்பு: ஒருவர் விடுதலை

Posted on November 3, 2026 by Admin | 90 Views

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தாக்கல் செய்திருந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் அ. தர்ஷினி முன்னிலையில் இவ்விசாரணை இடம்பெற்றதுடன் பிரதிவாதிகளான பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தலைவர் மிப்ளால் மௌலவி, ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், தொழிலதிபர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சட்டத்தரணிகளான சிபான் மஹ்ரூப், சாரிக் காரியப்பர், ஆரிகா காரியப்பர், எம்.வை. அன்வர் சியாத், துல்ஹர் நயீன் துல்சான், ஏ.எல்.எம். றிபாஸ், பீ.எம். றஸீன், எம்.ஏ. அன்சில், எம். மனாப், எம். முஹம்மட் நப்ஸர், எம். முஹம்மட் முபீன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் இவ்வழக்கினை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்தனர். அத்துடன் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பிரதிவாதிகள் சார்பில் எழுத்துமூல ஆட்சேபனைகளும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

இவ்வழக்கின் ஐந்தாம் பிரதிவாதியான ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் வழக்காளி தொடர்பில் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவை நீக்கியமையால் அவரை இவ்வழக்கிலிருந்து விடுவித்து நீதவான் உத்தரவிட்டார்.

வழக்காளியான வைத்தியர் குணசிங்கம் சுகுணன் நேற்று(02) மன்றில் சமுகமளித்திருக்காத நிலையில் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வழக்காளி தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

ஏனைய இரு பிரதிவாதிகள் சார்பில் எழுத்துமூல ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காகவும், மேலதிக வாதங்களை முன்வைப்பதற்காகவும் குறித்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.