Top News
| அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம் | | சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட்டில் நாட்டுக்குப் பெருமை சேர்த்த அக்கரைப்பற்று அல்-முனவ்வரா மாணவி அனாபா | | பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் |
Oct 16, 2026

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

Posted on November 11, 2025 by Admin | 482 Views

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் விளைவாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 9,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (நவம்பர் 11) நிலவும் விற்பனை விலைப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கம் 3,25,000 ரூபாய்க்கும், 22 கரட் ஒரு பவுன் தங்கம் 3,00,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் கணித்து வருகின்றனர்.