Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

பாராளுமன்றத்தில் கலை கலாசாரக் குழு அமைக்க முன்மொழிவு கையளிப்பு

Posted on June 5, 2025 by Hafees | 277 Views

கலை-கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை பத்தாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவொன்று நேற்று (04) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்கு பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ன மற்றும் ருவன் மாபலகம ஆகியோர் இந்த முன்மொழிவை கையளித்தனர்.
அதற்கமைய, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அடுத்த கூட்டத்தில் இந்த முன்மொழிவு தொடர்பில் கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கை எடுப்பதற்காக ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.