Top News
| கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு | | அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி |
Oct 15, 2026

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

Posted on December 12, 2025 by Admin | 441 Views

முன்னாள் சபாநாயகரும் தற்போது பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதும் விபத்தினை தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த நிலையில் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று (11) அவர் பயணித்த ஜீப் சப்புகஸ்கந்த–தெனிமுல்லப் பகுதியில் மற்றொரு காருடன் மோதியது. அந்த காரில் இருந்த 25 வயது பெண், அவரது ஆறு மாத குழந்தை மற்றும் 55 வயது பாட்டி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.