Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

கம்பளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அட்டாளைச்சேனை குழுவினரால் இரண்டாவது நாளாக தொடரும் உதவிகள்

Posted on December 14, 2025 by Admin | 486 Views

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களுக்கு அடுத்த கட்ட உதவிகளை வழங்கும் நோக்கில் அட்டாளைச்சேனையிலிருந்து சென்ற குழுவினர் தங்களது பணிகளை இரண்டாவது நாளாகவும் இன்று (14) தொடர்ந்து முன்னெடுத்தனர்.

இந்த உதவி நடவடிக்கைகளின் போது பழுதடைந்த மின்சார மற்றும் நீர் இணைப்புகள் சீரமைக்கப்பட்டதுடன், வீதிகளில் குவிந்திருந்த குப்பைகள் அகற்றப்பட்டு பாதைகள் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வு மீளச் சீரடைய ஓரளவு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்பணிகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளருமான றியா மசூர், குழுத் தலைவர் ஓ.எல்.எம். றிஸ்வான் (அதிபர்), செயலாளர் எம். எஸ். ஜெனீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.