Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அக்கரைப்பற்றைச் சேர்ந்த கலாநிதி முனீப் முஸ்தபா பேராசிரியராக பதவி உயர்வு

Posted on June 6, 2025 by Admin | 340 Views

(என்.எம்.நஜாத்)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகச் செயல்பட்டு வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த கலாநிதி முனீப் எம். முஸ்தபா, தற்போது Bio Systems Technology துறையில் பேராசிரியர் (Professor) பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மலேசியா மலாயா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தை சிறப்புடன் முடித்த இவர், கல்வி மற்றும் ஆய்வு துறைகளில் தொடர்ச்சியான பணிவுடனும், அர்ப்பணிப்புடனும் மாபெரும் பங்களிப்பை வழங்கி வருகிறார்.

அவரது இந்த உயர்வு, அரிய கல்விச் சாதனையாகவும், சமூகத்தின் கண்ணியமாகவும் பார்க்கப்படுகிறது.

மர்ஹூம் முஸ்தபா ஆசிரியர் மற்றும் ரஷீனா உம்மா தம்பதியரின் புதல்வரான இவர், தற்பொழுது அக்கரைப்பற்று மன்புஉல் கைராத் பெண்கள் அறபுக் கல்லூரியின் ஆளுநர் சபைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் அடைந்துள்ள இப்பெரும் கல்வி வெற்றி, இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு ஒரு முன்னோடியான ஊக்கத்தையும், முன்னுதாரணத்தையும் வழங்கும் என்பதில் ஐயமில்லை.