Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

Posted on January 1, 2026 by Admin | 403 Views

2026 ஆம் ஆண்டு புத்தாண்டின் முதல்நாளான இன்று (01) நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச திணைக்களங்களிலும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் புதிய ஆண்டில் சத்தியப்பிரமாணம் செய்து தமது பணிகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வு இன்று காலை அம்பாறை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

சத்தியப்பிரமாண நிகழ்வில் பங்கேற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் புதிய ஆண்டிற்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டதுடன் ஒருவருக்கொருவர் புதுவருட வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு தமது பணிகளை ஆரம்பித்தனர்.