Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

இன்று முதல் லாஃப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு

Posted on January 1, 2026 by Admin | 423 Views

இன்றிலிருந்து (1) அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 150ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டரின் புதிய விலை 4,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 5 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1,710 ரூபா ஆகும்.

இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.