Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

பால்மா விலை 125 ரூபா வரை குறைப்பு

Posted on January 14, 2026 by Admin | 370 Views

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியின் விலை ரூ.125 ஆக குறைக்கப்படவுள்ளது. இதேபோல் 400 கிராம் பால்மா பொதியின் விலையும் ரூ.50 அளவில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தம் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என வர்த்தக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.