Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இறக்காமத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கான இளைஞர் அமைப்பாளர்கள் நியமனம்

Posted on January 18, 2026 by Admin | 340 Views

(இறக்காமம் செய்தியாளர்- ஹாதி)

“தளிர் விடும் மரங்கள்” எனும் தலைப்பில் இறக்காம பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2026.01.15ம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இறக்காமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் (PC), பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். வாசித், இறக்காம பிரதேச சபை தவிசாளர் முஸ்மி, கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம். முஷாரப், கட்சியின் பிரதித் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், பிரதி செயலாளர் நாயகம் மன்சூர் ஏ. காதர், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன் (Ex.MMC) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இறக்காம பிரதேச சபை உறுப்பினர்களான என்.எம். ஆசிக், எம்.எம். நாசர், எச். சஜா, ஏ. சாஜிதா, அமைப்பாளர் ஏ. நிசார் (Tr), உயர்பீட உறுப்பினர் ஏ. ரியாஸ் (Tr), மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.