Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளராக ஐ.எம்.வாஜித் தெரிவு

Posted on February 2, 2026 by Admin | 383 Views

அட்டாளைச்சேனை அக்-அந் நூர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் பாடசாலை அதிபர் என்.கே.எம். மிஸ்வர் தலைமையில் 2026 ஜனவரி 31ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போது பழைய மாணவர் சங்கத்தின் 2026–2027ஆம் ஆண்டுகளுக்கான புதிய செயலாளராக தபாலக உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான ஐ. முஹம்மட் வாஜித் தெரிவுசெய்யப்பட்டார்.

மேற்படி நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் கலந்துகொண்டதுடன், பாடசாலையின் பிரதி அதிபர் டீ. அஹ்சாத், ஆசிரியர் அஷ்ரக் இஸ்மாயில், பாடசாலை இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான எம்.எச். ஹம்மாத் ஆகியோரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.