Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

சம்மாந்துறை பிரதேசத்தின் பாரிய அபிவிருத்திப் பணிகளுக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அனுமதி

Posted on February 11, 2026 by Admin | 364 Views

சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மட் ஹனீபா அவர்களின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் 2026.02.10ம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, வீதி அபிவிருத்தி, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பான திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டன.

மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது, அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவது மற்றும் அரச சேவைகளை மக்களுக்கு எளிதாகக் கொண்டு செல்லும் வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.ஏ.எம். தாஹிர், கே. கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்ததுடன் பிரதேச அரச நிறுவனங்களின் தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.