Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நாட்டில் மீண்டும் மின் தடையா? உதயன் கம்பன்பில எச்சரிக்கை

Posted on February 15, 2026 by Admin | 334 Views

நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக எதிர்வரும் ஜூலை மாத இறுதியிலிருந்து செப்டம்பர் நடுப்பகுதி வரை நாடு கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்று உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார்.

தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி இவ்வாண்டிற்கான தேவையில் 212 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகும். அந்த 212வது நாள் ஜூலை 31ஆம் திகதி நிறைவடைகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக செப்டம்பர் நடுப்பகுதி வரை புதிய நிலக்கரி சரக்குகளை இறக்குமதி செய்வது சாத்தியமற்றதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இதன் விளைவாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மூடப்பட வேண்டிய நிலை உருவாகலாம் என அவர் கூறினார்.

இந்த சூழ்நிலை தொடர்ந்தால் நாடு முழுவதும் நீண்ட நேர மின்தடை அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அல்லது ஒரு மின்அலகின் விலை ரூ.90 வரை உயர்த்தப்பட்டு மின்கட்டணங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.