Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?பிரதமர் வெளியிட்ட தகவல்

Posted on February 19, 2026 by Admin | 212 Views

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் சம்பளமும் பல்வேறு கொடுப்பனவுகளும் தொடர்பான விவரங்கள் இன்று (19) பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த தகவல்களை அறிவித்தார்.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மாதாந்திரமாக ரூ.54,285 கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதனுடன் மாதாந்திர உபசரிப்புக் கொடுப்பனவாக ரூ.1,000 மற்றும் சாரதிக் கொடுப்பனவாக ரூ.3,500 வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவர் நியமிக்கப்பட்டால் அந்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என பிரதமர் குறிப்பிட்டார்.

தொலைபேசி செலவுக்காக மாதத்திற்கு ரூ.50,000வும், போக்குவரத்துக்காக ரூ.15,000வும் வழங்கப்படுகின்றன. அலுவலக செலவிற்காக மாதந்தோறும் ரூ.1,00,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.2,500 வழங்கப்படுவதுடன் குழுக்கூட்டங்களில் பங்கேற்பதற்கும் நாளொன்றுக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களிலும் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்கு இதே அளவு கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


ஒவ்வொரு உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் வரை உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு மாதத்தின் முதலாம் திகதியன்று சந்தையில் நிலவும் அங்கீகரிக்கப்பட்ட டீசல் விலைக்கேற்ப எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் மேலும் விளக்கினார்.