Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயக பதவியில் மாற்றம்

Posted on June 9, 2025 by Admin | 193 Views

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக இன்று (ஜூன் 9) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஒரு கைதி விடுவிக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போதைய ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

இச்செயல்முறைகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்றாகும். குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.