Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியக் கப்பலில் 180 பேர்

Posted on March 4, 2026 by Admin | 329 Views

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் IRIS Dena எனப்படும் ஈரானிய போர்க்கப்பல் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி கடற்பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இலங்கை கடல் எல்லைக்கு வெளியே இன்று அதிகாலை இந்த அவசர நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கப்பலில் சுமார் 180 மாலுமிகள் இருந்ததாக நம்பப்படுகிறது. அவசர அழைப்பைத் தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் கடற்படை விமானங்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இதுவரை சுமார் 30 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு தெற்கு இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

IRIS Dena (அல்லது IRINS Dena) என்பது Islamic Republic of Iran Navyக்கு உட்பட்ட Moudge வகை போர்க்கப்பலாகும். ஈரானின் தெற்கு கடற்படைப் பிரிவில் சேவையாற்றி வந்த இந்த கப்பல் ஈரானின் உயரமான சிகரங்களில் ஒன்றான Dena மலையின் பெயரால் அழைக்கப்படுகிறது.

இதனிடையே ஓமான் வளைகுடா மற்றும் பந்தர் அப்பாஸ் கடற்பகுதிகளில் ஈரானின் பிற போர்க்கப்பல்கள் தாக்குதல்களால் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.