Top News
| உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின | | காலி ரயில் நிலையத்தில் பற்றி எரியும் ரயில் பெட்டிகள் | | நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு |
Apr 2, 2026

வேறொரு தொலைபேசி இலக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை பெறும் முறை

Posted on March 19, 2026 by Admin | 13672 Views

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள எரிபொருள் QR குறியீட்டை பெறும் செயல்முறையில் ஒரு வாகனம் ஏற்கனவே வேறு தொலைபேசி இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை புதிய இலக்கத்திற்கு மாற்றுவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான எளிய நடைமுறைகள் பின்வருமாறு:

முதலில் உங்கள் கணினி அல்லது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான fuelpass.gov.lk இற்கு செல்ல வேண்டும். அங்கு “Register” (பதிவு செய்தல்) என்ற தெரிவைத் தேர்வு செய்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம் அல்லது வணிகப் பதிவு இலக்கத்தை உள்ளிட வேண்டும். தொடர்ந்து தற்போது பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை வழங்கி அதற்கு வரும் OTP குறியீட்டை உள்ளிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்த கட்டமாக உங்கள் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும். பின்னர் வாகனத்தின் முக்கிய விவரங்கள் வாகனப் பதிவு இலக்கம், வாகன வகை, சேஸி இலக்கம் மற்றும் எரிபொருள் வகை (பெட்ரோல் அல்லது டீசல்) சரியாக உள்ளிடப்பட வேண்டும். அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்த பிறகு நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்து ‘Submit’ செய்ய வேண்டும்.

தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் இரண்டு வகையான பதில்களில் ஒன்று திரையில் தோன்றும். வாகனம் இதற்கு முன்பு பதிவு செய்யப்படவில்லை என்றால் உடனடியாக QR குறியீடு வழங்கப்படும். ஆனால் அது ஏற்கனவே வேறு தொலைபேசி இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை குறிப்பிட்டு ஒரு அறிவிப்பு (Pop-up) தோன்றும்.

அவ்வாறு தோன்றும் செய்தியில் நீங்கள் அந்த வாகனத்தின் சட்டபூர்வ உரிமையாளர் எனில் பழைய பதிவை ரத்து செய்து புதிய இலக்கத்திற்கு மாற்றிக் கொள்ளும் விருப்பம் வழங்கப்படும். இதனை உறுதிப்படுத்த “Confirm” என்பதைத் தேர்வு செய்தால் பழைய பதிவு நீக்கப்பட்டு்புதிய தொலைபேசி இலக்கத்தின் கீழ் QR குறியீடு பெற முடியும்.

இவ்வாறு சில எளிய படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம்்வாகன உரிமையாளர்கள் தங்களது எரிபொருள் QR பதிவை எளிதாக புதுப்பிக்கலாம்.