Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

ஹோர்முஸ் நீர் முழுமையாக மூடப்படும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

Posted on March 22, 2026 by Admin | 268 Views

அமெரிக்கா தனது எரிசக்தி உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் ஹோர்முஸ் நீர் முழுமையாக மூடப்படும் என இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பான தகவல்கள் ஈரானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

அமெரிக்காவின் அந்த எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.