Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

ஈரானின் அதி உயர் பாதுகாப்புச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

Posted on March 24, 2026 by Admin | 302 Views

ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்புச் சபையின் புதிய செயலாளராக மொஹமட் பாகர் சொல்காதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோள் காட்டி ஐ.ஆர்.என்.ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்–அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் அந்தச் சபையின் செயலாளராக இருந்த அலி லரிஜானி கடந்த வாரம் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மொஹமட் பாகர் சொல்காதர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.