Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அமெரிக்கா–ஈரான் போர் முடிவுக்கு உயர்மட்ட பேச்சுவார்த்தை

Posted on March 25, 2026 by Admin | 257 Views

அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இந்த பேச்சுவார்த்தைகளை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் தலைமையிலான குழு முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த குழுவில் ஜேரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்ட முக்கிய நபர்களும் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நீடித்த மற்றும் நிலையான அமைதிக்கான முன்மொழிவுகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஈரானிய தரப்புகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.