Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குடிநீர் வெட்டு

Posted on March 25, 2026 by Admin | 288 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதன்படி நாளை (26) வியாழக்கிழமை காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் இந்த காலப்பகுதியில் நீர் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் திருத்தப்பணிகள் நிறைவடைந்ததும் இயல்பான குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.