Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

டொனால்ட் ட்ரம்பின் மீதான மக்கள் ஆதரவு 36 வீதத்தால் சரிந்தது

Posted on March 25, 2026 by Admin | 292 Views

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மீது அந்நாட்டு மக்களிடையே காணப்பட்ட ஆதரவு மற்றும் செல்வாக்கு அண்மைக்காலத்தில் கணிசமாகக் குறைந்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அறிக்கைகளின் படி ட்ரம்பின் மக்கள் ஆதரவு சுமார் 36 சதவீதத்திற்குத் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவரது அரசியல் நிலைப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுவதாக மதிப்பிடப்படுகிறது.

குறிப்பாக பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான விமர்சனங்களும், ஈரானை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள ராணுவ நடவடிக்கைகளும் இந்த ஆதரவு சரிவிற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.