Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

எரிபொருள் விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

Posted on March 28, 2026 by Admin | 586 Views

மாதாந்தம் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம்(மார்ச்) அமுல்படுத்தப்படமாட்டாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இத்தகவலை அதன் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளின் மாற்றத்தை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் விலை திருத்தம் குறித்த இறுதி முடிவை அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே எரிபொருள் ஒதுக்கீட்டு முறைமை இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.