Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதி திட்டம்

Posted on April 3, 2026 by Admin | 313 Views

கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் மீன்பிடி கொள்கை முன்மொழிவுகளுக்கு அமைவாக செயல்படுத்தப்படும் இந்த விசேட திட்டம் கடலில் ஈடுபடும் தொழிலாளர்களின் அபாயங்களை குறைத்து, அவர்களின் குடும்பங்களின் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடற்றொழிலாளர்கள் தங்களது வசதிக்கேற்ற வகையில் பல்வேறு காப்புறுதி விருப்பங்களைத் தேர்வு செய்ய முடியும். மீன்பிடி நடவடிக்கைகளின் போது உயிரிழப்பு ஏற்பட்டால் தெரிவு செய்யப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்படும்.

அதன்படி,

  • ஆண்டுக்கு ரூபா 1,920 செலுத்தும் திட்டத்தின் கீழ் ரூபா 12 இலட்சம் வரை இழப்பீடு
  • ஆண்டுக்கு ரூபா 2,550 செலுத்தும் திட்டத்தின் கீழ் ரூபா 15 இலட்சம் வரை இழப்பீடு,
  • ஆண்டுக்கு ரூபா 3,600 செலுத்தும் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூபா 20 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

இத்திட்டம் உயிரிழப்புகளுக்கான பாதுகாப்பை மட்டுமன்றி தொழில் சார்ந்த பல்வேறு அபாயங்களுக்கும் நிதி ஆதரவை வழங்குகிறது. விபத்துகளால் ஏற்படும் நிரந்தர அல்லது தற்காலிக இயலாமை நிலைகளில் உதவி வழங்கப்படுவதுடன் சிகிச்சை காரணமாக வேலை செய்ய முடியாத காலப்பகுதிகளில் வருமான இழப்பையும் ஈடுகட்டும் வசதிகள் இதில் உள்ளன.

கடலில் மீன்பிடி நடவடிக்கைகளின் போது காணாமல் போகும் சம்பவங்களிலும் காப்புறுதி நன்மைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பொருளாதார எதிர்காலத்தை பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை குறிப்பிட்டுள்ளது.