Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புதன் விடுமுறை ரத்து

Posted on April 6, 2026 by Admin | 326 Views

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த புதன்கிழமை அரச விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி வெளியிட்ட தகவலின்படி இந்த தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். இதற்கான தொடர்புடைய சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி நிலைமையை முன்னிட்டு எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 17ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கை தற்போது நிலைமைகள் மாறியுள்ளதன் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.