கிளிநொச்சியில் 2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் தாய் மற்றும் அவரது தொடர்புடைய கள்ளக்காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளில் குறித்த தொகையில் இருந்து 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை அவர்கள் கொள்வனவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதேவேளை குழந்தையை பணம் கொடுத்து பெற்றுக்கொண்ட பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.