Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

ஹஜ்ஜாஜிகளுக்காக அட்டாளைச்சேனையில் சிறப்பு துஆ நிகழ்ச்சி

Posted on April 27, 2026 by Admin | 297 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இவ் ஆண்டு புனித ஹஜ் யாத்திரைக்குச் செல்லவுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல். ஹனீஸ் அவர்களின் தலைமையில் 2026.04.23 ஆம் திகதி அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் மரைக்காயர் சபை இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, உதவிக் கல்விப் பணிப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். பாயிஸ், பள்ளிவாயல் நிர்வாகத்தினர், மரைக்காயர் சபையின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், உலமாக்கள் உள்ளிட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஹஜ் யாத்திரைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்காக அனைவரும் இணைந்து மனமார்ந்த துஆ பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.