Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

போரை முடிக்க ஈரான் அமெரிக்காவுக்கு புதிய முன்மொழிவு

Posted on May 1, 2026 by Admin | 283 Views

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய முன்மொழிவை பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

தெஹ்ரான் மற்றும் வொஷிங்டன் இடையிலான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமின்றி நின்றுவிட்டதாகக் கருதப்பட்ட சூழ்நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இரு தரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியிருந்தாலும், நீடித்த அமைதியை உறுதி செய்யும் விரிவான உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்துவருகின்றன.