Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ் நூல் வெளியீடு

Posted on May 2, 2026 by Admin | 351 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- நுஸ்கி)

அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதலை வலுப்படுத்தவும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட ‘’அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்’’ நூலின் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (02.05.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம்.தாஹிர், காதர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக், அனைத்து மாவட்டங்களிலிருந்து வருகை தந்த நிர்வாகிகள், மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் என 2000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.