Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை புதிய சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளராக யூ.கே.எம். நழீம் பொறுப்பேற்பு

Posted on May 9, 2026 by Admin | 263 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- நுஸ்கி)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளராக யூ.கே.எம். நழீம் கடந்த 07ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதற்கு முன்னர் அக்கரைப்பற்று சமூர்த்தி வங்கி முகாமையாளராகப் பணியாற்றிய அவர் நீண்டகால நிர்வாக அனுபவமும் சமூக சேவையிலும் சிறப்பான பங்களிப்பும் கொண்ட அதிகாரியாக அறியப்படுகிறார். சமூர்த்தி திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துவதிலும், வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்ததிலும் அவர் குறிப்பிடத்தக்க சேவையாற்றியுள்ளார்.

அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட யூ.கே.எம். நழீம் சிறந்த ஆளுமை, ஒழுக்கம் மற்றும் திறமையான நிர்வாகத்திறன் கொண்ட அதிகாரியாக பொதுமக்களாலும் அதிகாரிகளாலும் பாராட்டப்படுபவர். அரச சேவையில் மனிதநேய அணுகுமுறையுடன் செயல்படுகின்றவர் என்ற நல்ல பெயரையும் பெற்றுள்ளார்.