Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

பால்மா விலை இன்று முதல் உயர்வு

Posted on May 20, 2026 by Admin | 220 Views

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் விலைகளை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

400 கிராம் பால்மா பொதியின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 125 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

புதிய விலைகள் இன்று (20) முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.