Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ஒலுவில் அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரி த்ரில் வெற்றியுடன் சம்பியன் மகுடம் சூடியது

Posted on May 20, 2026 by Admin | 152 Views

(ஒலுவில் செய்தியாளர் – ரமீஸ் எம். லெவ்வை)

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.

இப்போட்டிகளில் ஒலுவில் கமு/அக் அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரி மாணவிகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, 14 முதலிடங்கள், 8 இரண்டாம் இடங்கள் மற்றும் 1 மூன்றாம் இடத்தை பெற்று, பெண்கள் பிரிவில் வலய மட்ட சம்பியன் பட்டத்தை த்ரில் வெற்றியுடன் மீண்டும் கைப்பற்றினர்.

இக்கல்லூரியைச் சேர்ந்த 22 மாணவிகள் மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்ற தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இதற்கு முன்னதாக 2026 மே 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெற்ற அட்டாளைச்சேனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளிலும் அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரி பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மாணவிகளை திறம்பட பயிற்றுவித்து வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர் கெப்டன் A.C. அஹமட் நஷாத், உதவி ஆசிரியர்களான J. ஜெயநிவேதிகன், M.L. றமீஸ், M.S. சாஜிதா பேகம், N.F. சுமையா, S.L. அறபா, I. றிஸ்பானா, F.F. பாரிஸா, J. சய்பூநிஸா, M.F. சம்ஹா மற்றும் A.M.F. சிப்னா ஆகியோருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள், ஒத்துழைத்த பெற்றோர்கள், அதிபர் S.M.B.M. அறூஸ், பிரதி அதிபர் A.L.F. டில்சா றோஸ், உதவி அதிபர் K.L. மிஹ்ளார் உள்ளிட்ட ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், SDEC மற்றும் PPA உறுப்பினர்கள் அடங்கிய பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.