Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

கொடூர வெப்பம் காரணமாக ஒரே நாளில் 34 பேர் பலி

Posted on May 24, 2026 by Admin | 238 Views

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கடும் வெப்ப அலை காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸை கடந்துள்ளதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கும் கடும் வெப்பம் நீடிக்கும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் போதிய அளவு தண்ணீர் அருந்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.