Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விமல் வீரவங்ச விடுவிப்பு

Posted on May 25, 2026 by Admin | 125 Views

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகை நிகழ்வை குழப்ப முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை விமல் வீரவங்ச தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.