Top News
| கருங்கொடி மண்ணின் இளம் கால்பந்து வீரர்கள் சர்வதேச போட்டியில் சாதனை | | பூநொச்சிமுனை மீனவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி | | 25 வயது தாயை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை |
Aug 12, 2025

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

Posted on June 13, 2025 by Admin | 144 Views

திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று (13.06.2025) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பிரதித் தேசிய அமைப்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். லாஹீர், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பெருந்தொகையான கட்சிப் போராளிகள் இதில் உற்சாகமாக பங்கேற்றனர்.