Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! 

Posted on June 18, 2026 by Admin | 167 Views

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்து ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) புதிய தீர்மானம் ஒன்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகையதொரு சட்டப்பூர்வ கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ள முதல் அரபு நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு இராச்சியம் இதன்மூலம் பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடக அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த அதிரடித் தீர்மானத்தின்படி, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்களின் பெயர்களில் தனிப்பட்ட சமூக வலைத்தளக் கணக்குகளை உருவாக்குவதோ அல்லது அவற்றை இயக்குவதோ முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. அத்துடன், இச்சிறுவர்கள் சமூக வலைத்தளங்களின் முழுமையான அம்சங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தவும் புதிய விதிமுறைகள் வழிவகை செய்கின்றன.

இணைய உலகில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், டிஜிட்டல் தளங்களால் ஏற்படும் சவால்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முன்னோடி முயற்சி, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.