Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

2025(2026) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Posted on June 19, 2026 by Admin | 475 Views

2025(2026)ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை (20) , நாளை மறுதினம்(21) இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரீட்சை பெறுபேறுகளை இணையதளத்தில் பதிவேற்றும் இறுதிப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2025(2026)ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் பல இலட்சக்கணக்கான மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் அவர்களது நீண்டகால எதிர்பார்ப்பு இதன் மூலம் நிறைவுக்கு வரவுள்ளது. மாணவர்கள் தங்களின் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய முகவரிகளின் ஊடாகத் தங்களின் சுட்டெண்ணை (Index Number) உள்ளீடு செய்து மிக எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.