Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உதுமாலெப்பை எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் நாவிதன்வெளி விவசாயிகளுக்கு ரூ. 5 இலட்சம் பெறுமதியான மண்வெட்டிகள் வழங்கி வைப்பு

Posted on July 6, 2026 by Admin | 83 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

நாவிதன்வெளி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பிரதேசத்தின் விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் நாவிதன்வெளி பகுதியில் பெறுமதியான மண்வெட்டிகள் உத்தியோகபூர்வமாக அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர எம்.எஸ். உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் தங்களின் அன்றாட விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவும் வகையிலேயே ஐந்து இலட்சம் ரூபாய் (ரூ. 500,000) நிதியொதுக்கீட்டில் இந்த முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாவிதன்வெளி மத்திய குழு அமைப்பாளர் அல்ஹாஜ் நஸார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விநியோக நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.ஏ. அன்சார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உபகரணங்களை விவசாயிகளிடம் கையளித்தார். 

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நவாஸ் மற்றும் பயனாளிகளான உள்ளூர் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.