Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இடமாற்றப்பட்ட கைதிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு

Posted on July 8, 2026 by Admin | 198 Views

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதே சம்பவத்தின் நிமித்தம் பூஸா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த மற்றொரு கைதியும் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை கைதிகளின் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை குறித்த பலத்த விவாதங்களை தோற்றுவித்துள்ளது.