Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

பாலமுனை கல்வி நிறுவனங்களுக்கு அப்துல் வாஸித் எம்பி 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

Posted on August 12, 2026 by Admin | 162 Views

(பொத்துவில் செய்தியாளர்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பிரதேசத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாலமுனையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஏ.எல். முஹம்மது றனீஸ் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாலமுனை அல்-ஹிதாயா பெண்கள் பாடசாலைக்கு 2 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலைத் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கணினித் தொகுதியொன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எம். உவைஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.