Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் ஹாபிழ்கள் மற்றும் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா | | இலங்கை – ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்ற நட்புறவுச் சங்க உதவிச் செயலாளராக உதுமாலெப்பை எம்.பி. தெரிவு | | தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை |
Nov 29, 2026

அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபராக எஸ்.எம்.ஸாகிர் ஹுஸைன் தெரிவு

Posted on August 17, 2026 by Admin | 430 Views

அக்கறைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்களின் உத்தியோகபூர்வ பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் பாடசாலைகளில் நிலவும் நிர்வாகத் தேவையைக் கருத்திற்கொண்டு நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின் முடிவுகளின் பிரகாரம், தகைமைபெற்ற புதிய அதிபர்களின் விபரங்கள் மற்றும் அவற்றுக்குரிய பாடசாலைகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, குறித்த நியமனங்களின் பிரகாரம் அக்கரைப்பற்று, ஆயிஷா முஸ்லிம் மகளிர் கால்லூரியின் புதிய அதிபராக எஸ்.எம்.ஷாகிர் ஹுஸைன் அவர்கள் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.