Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம். நிஹால் அட்டாளைச்சேனை உதவித் தவிசாளராக ஏகமனதாகத் தெரிவு

Posted on August 24, 2026 by Admin | 100 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் ஏலவே செய்து கொள்ளப்பட்ட அரசியல் உடன்படிக்கையின் பிரகாரமே இந்தத் தெரிவு சுமுகமான முறையில் இடம்பெற்றுள்ளது.

புதிய உதவித் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட சபைக் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.டி.எம். ராபி தலைமையில் இன்று (24) அட்டாளைச்சேனை பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விசேட அமர்வில் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த, தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹாலின் பெயர் பிரேரிக்கப்பட்டு அவர் உதவித் தவிசாளர் பதவிக்கு எவ்வித எதிர்ப்புகளுமின்றி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதன் ஊடாக தனது ஒலுவில் பிரதேசத்திற்கும் தேசிய காங்கிரஸிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் முன்னாள் உதவித் தவிசாளர் எப். நஜீத், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல். அமானுல்லா, ஏ.சி. நியாஸ், ஏ.எல். பாயிஸ் (ADE), எஸ்.எம். றியாஸ், றியா மசூர், ஐ.எல். அஸ்வர், எம்.எல். றினாஸ், பி.எச்.ஜி. டி சில்வா, சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், ஐ.எல். சிராஜ், ஜே.எப். நஜா மற்றும் எப்.எப். மின்ஹா ஆகியோரும் குறித்த சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் அரச உயர் அதிகாரிகளான கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என். ஐங்கரன், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சாமர ஜெயதிலக்க, அதிகாரி ஆர்.எம். நலீல் மற்றும் அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் ஆய்வு உத்தியோகத்தர் எம்.எம்.எம். றிஸ்வி ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.