Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

நீதிமன்றம் செல்லும் வழியில் ஞானசார தேரருக்கு திடீர் மயக்கம்- வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted on September 25, 2026 by Admin | 87 Views

கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்படவிருந்த கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் மயக்கமுற்றதையடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ‘பெரேரா அன்ட் சன்ஸ்’ உணவகத்தில் உணவு உட்கொண்டிருந்த போதே எதிர்பாராதவிதமாக தேரருக்கு இந்த மயக்கநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வாவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்ட கொழும்பு மேலதிக நீதிவான் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு எதிரான குறித்த வழக்கை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.