உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை ‘ஹவுஸ் ஒப் இங்கிலீஷ்’ (House of English) கல்வி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இல்ல விளையாட்டுப் போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிறுவனத்தின் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.ரி. நகீல் தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டு விழாவானது அட்டாளைச்சேனைக் கிளையின் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ். ஜெனீஸ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் சிறப்பான நெறிப்படுத்தலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களும் கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். பாயிஸ் (ADE), ஓய்வுபெற்ற விளையாட்டு அதிகாரி எஸ்.எல். தாஜுதீன், ஓய்வுபெற்ற அதிபர்களான எம்.ஏ. அன்சார், கிதுர் முஹம்மட் மற்றும் பாடசாலை அதிபர்களான ஏ.எல். பாயிஸ், ஏ.எல். யாசீன், எஸ்.எம். ரஹீம், எஸ்.ஏ. ஜெசாஹிர், எம்.ஐ.எம். ரியாஸ், ஓ.எல்.எம். ரிஸ்வான், எம்.எஸ்.எம். பாஹிம், எம்.ஐ. அஜ்மீர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அதிகாரி (DCC) மனூஸ் அபூபக்கர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ். சியாத், விரிவுரையாளர் எம்.எம். அஸ்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ். கரீமா, வர்த்தகப் பிரமுகர் ஏ.கே. அமீர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், பார்வையாளர்கள் எனப் பெருமளவானோரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





