Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவியர் அனுமதி ஆரம்பம் 

Posted on October 20, 2026 by Admin | 77 Views

அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் 2027ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவியரைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  

இக்கல்லூரியில் பெண் மாணவிகளுக்குப் பாதுகாப்பான சூழலில் ஐந்து வருட காலப்பகுதிக்குள் சன்மார்க்க ஷரீஆக் கல்வியையும் பாடசாலைப் பொதுக்கல்விப் பாடங்களையும் (GCE O/L, GCE A/L) ஒருங்கே கற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் தினமும் முற்பகல் 6.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும்.  

கற்கைநெறியின் சிறப்பம்சங்கள் மற்றும் அடைவுகள்:

1. இஸ்லாமிய ஷரீஆ கற்கைநெறி (ஆலிமா) வழங்கப்படும்.

2. க.பொ.த சாதாரண தரம் (GCE O/L) மற்றும் உயர்தரம் (GCE A/L) ஆகிய பொதுப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படும்.  

3.அரபு, ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழித் திறன் மேம்பாட்டுக் கல்வி கற்பிக்கப்படும்.  

4.சமையல், தையல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) உள்ளிட்ட தொழிற்கல்விப் பயிற்சிகள் அளிக்கப்படும்.  

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்:

 2027ஆம் ஆண்டில் தரம் 9, 10 அல்லது 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகளாக இருத்தல் வேண்டும்.  

 அல்குர்ஆனைத் திருத்தமாக ஓதக்கூடியவராகவும், தேகாரோக்கியம் உடையவராகவும் இருத்தல் அவசியம்.  

 க.பொ.த சாதாரண தரப் (GCE O/L) பரீட்சை எழுதிய மாணவிகளுக்கு அனுமதியின் போது முன்னுரிமை வழங்கப்படும்.  

தகைமையுள்ள மாணவிகள் விண்ணப்பப் படிவங்களைக் கல்லூரி காரியாலயத்தில் பெற்று பூர்த்தி செய்து 2026.11.30 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் நேரடியாக ஒப்படைக்குமாறு கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்ஹ் முப்தி ஏ. றயீஸ் (ஹாமிதி) அறிவித்துள்ளார். மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 075 433 0600 அல்லது 077 894 1780 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும்.