Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி

Posted on October 22, 2026 by Admin | 58 Views

அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அட்டப்பள்ளம் பகுதியில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் போக்குவரத்துப் பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நாளை (23) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்விடயங்கள் குறித்து அரசாங்கத்திடம் விளக்கம் கோரவுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள உத்தேசப் பாலங்களின் பெயர்ப் பட்டியல் மற்றும் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள் யாவை என அவர் இதன்போது வினவவுள்ளார்.

அத்துடன் கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியின் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டப்பள்ளம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கும் அவசர மாற்று ஏற்பாடாக தற்காலிகப் பாலங்களை அமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பவுள்ளார்.

மேலும் குறித்த பகுதியில் நிரந்தரப் பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான முழுமையான விபரங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அமைச்சரிடம் கோரவுள்ளார்.