Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தரப் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் நியமனம்

Posted on November 2, 2026 by Admin | 90 Views

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய நிரந்தரப் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (02) திங்கட்கிழமை சுகாதார அமைச்சில் நடைபெற்ற போது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கத்திடம் நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாக மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் சுகாதார அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.